கடலூர் மாவட்டம், விருதாச்சலத்தில் தனியார் பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு, முதலுதவி சிகிச்சை, தீயணைப்பானை கையாளுவது உள்ளிட்டவை குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
விருதாச்சலம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள் கூட்டுத் தணிக்கை செய்யப்பட்டன.
அப்போது வேக கட்டுப்பாட்டு கருவி, அவசர வழிக்கதவு உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளதா என வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம் தலையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.