ஈரோட்டில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி நான்கு பேரிடம் 20 லட்ச ரூபாய் மோசடி செய்த தனியார் காப்பீடு நிறுவன மேலாளரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
மூலப்பாளையத்தை சேர்ந்த ராஜேஷ் மார்ட்டீன் தனியார் மருத்துவ காப்பீடு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருடன் பணியாற்றும் பார்த்திபன், அரசு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி, 5 லட்ச ரூபாய் வங்கி கணக்கு மூலம் பெற்றுள்ளார்.
இதேபோல் பலரிடம் 20 லட்சத்து 9 ஆயிரம் பணத்தை பெற்று பார்த்திபன் தலைமறைவானார். ராஜேஷ் மார்ட்டீன் அளித்த புகாரின் பேரில் பார்த்திபனை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.