நெல்லை மாவட்டம், கொக்கிரக்குளம் சிக்னல் பகுதியில் பசுமைப் பந்தல் அமைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் அரசு சார்பில் பசுமைப்பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொக்கிரக்குளம் பகுதியில் வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும், வாகன ஓட்டிகளின் வசதிக்காகவும் பசுமைப்பந்தல் கூரை அமைக்கப்பட்டது.
தனியார் ஜவுளி நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்ட இந்த பசுமைப் பந்தலால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர்.