எவரெஸ்ட் சிகரத்தில் ஏற லட்சக்கணக்கானோர் பதிவு செய்திருப்பதாலும், அவர்கள் பயன்படுத்தும் பொருட்களை அங்கேயே விட்டு செல்வதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 167 பேர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்காக பதிவு செய்து, நேபாளம் வந்ததாக அந்நாட்டு சுற்றுலா வாரியம் தெரிவித்துள்ளது.
இது கடந்த ஆண்டைவிட 28.9 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.