எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும் சந்திக்க தயாராக இருப்பதாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். கடந்த 3 ஆண்டுகளில் உண்மையை பேசியதற்காக என் மீதும், பாஜக நிர்வாகிகள் மீதும் பல்வேறு வழக்குகளை திமுக அரசு தொடர்ந்துள்ளதாகவும், தற்போது என் மீது புதிதாக ஒரு வழக்கு தொடர திமுக அரசு அனுமதி அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
உண்மையை பேசியதற்காக வழக்கு தொடர்வதும், போதை ஆசாமிகளுக்கு கட்சியில் பொறுப்பு வழங்குவதும்தான் திமுகவின் வாடிக்கை என அவர் தெரிவித்துள்ளார்.
உண்மையை வெளிக் கொண்டுவருவதில் இருந்து எங்களை தடுத்து நிறுத்த திமுகவால் முடியாது என்று தெரிவித்துள்ள அண்ணாமலை, எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும் சந்திக்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.