தூத்துக்குடியில் உள்ள அரசு அலுவலகத்தில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட அரசுப் பணியாளரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாசரேத் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த அந்தோணி ராஜன், மதுபோதையில் அலுவலகத்தில் இருந்த அதிகாரிகளிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து மின்வாரிய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.