4-ம் கட்ட மக்களவை தேர்தலில் 67 புள்ளி இரண்டு ஐந்து சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
நான்காம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்குத் தொடங்கியது.
ஆந்திரா, தெலங்கானா, இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
நான்காம் கட்ட மக்களவை தேர்தலோடு, ஆந்திரா மற்றும் ஒடிசாவில் சட்டப்பேரவை தேர்தலுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
பொதுமக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்த நிலையில், மாலை6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
ஆந்திரா மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில், வாக்குப்பதிவின்போது வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இந்தத் தேர்தலில் 67 புள்ளி இரண்டு ஐந்து சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக, மேற்கு வங்கத்தில் 75 புள்ளி ஆறு ஆறு சதவீதமும், குறைந்த பட்சமாக ஸ்ரீநகரில் 38 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது.