ஆந்திராவில் கள்ள ஓட்டு போட முயன்றவரை முட்டி போட வைத்து ராணுவப்படையினர் தண்டிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருப்பதியில் உள்ள தொட்டபுரம் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது கள்ள ஓட்டு போட முயன்ற நபரை வளைத்துப் பிடித்த ராணுவப்படையினர், அவரை முட்டிபோட வைத்து தடியால் அடித்தனர்.
இது தொடர்பான காட்சி வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.