தமிகத்திற்கு இன்று மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென் இந்தியாவில் வரும் 22-ம் தேதி வரை கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் வரும் 19-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழ்நாட்டிற்கு இன்று சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், நாளையும், நாளை மறுதினமும் ஆரஞ்ச் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.