சென்னையில் நடைபெறும் சர்வதேச கலாச்சார மாநாட்டில் தமிழ்நாட்டின் கலையும் சேர்க்கப்படும் என சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி உறுதியளித்துள்ளார்.
சென்னை ஐஐடி நடத்தும் ஸ்பிக் மெக்கேவின் 9-வது சர்வதேச கலாச்சார மாநாடு மே 20-ல் தொடங்குகிறது. ஒரு வார காலம் நடைபெறும் இம்மாநாட்டில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிகழ்வில் 25 பயிற்சி பட்டறைகள் மற்றும் 70 கலைகளைச் சேர்ந்த கலைஞர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, “சென்னை ஐஐடியில் இந்த ஆண்டு முதல் AI தொழில்நுட்ப படிப்பு அறிமுகப்படுத்தப்பட உள்ளது” என்றார். ர்வதேச கலாச்சார மாநாட்டில் தமிழ்நாட்டின் கலையும் சேர்க்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.