கரூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தென் கொரிய இளைஞரைக் காதலித்து தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.
வேலாயுதம்பாளையத்தை அடுத்துள்ள நடையனூர் பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவர், பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றிய நிலையில், தென்கொரியாவைச் சேர்ந்த மின்ஜுன் கிம் என்ற இளைஞருடன் அறிமுகமாகியுள்ளார்.
கடந்த ஓராண்டாக காதலித்து வந்த இருவரும், இரு வீட்டார் சம்மதத்துடன் தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.