ஈரோட்டில் இறந்துகிடந்த ஆண் யானையின் தந்தங்களை வெட்டி கடத்திய ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில், தந்தங்கள் இல்லாமல் ஆண் யானை மர்மமான முறையில் இறந்து கிடந்தது.
இதுதொடர்பாக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பொம்மன் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்ததில், யானை தந்தங்களை வெட்டி விற்பனைக்காக கர்நாடகாவில் பதுக்கி வைத்திருந்ததை ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து தந்தங்களைபறிமுதல் செய்த போலீசார் பொம்மனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.