சென்னையில் துணிக்கடைக்குள் நுழைந்து கத்தியை காட்டி மிரட்டிய ரவுடியை வியாபாரிகள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
வண்ணாரப்பேட்டை அடுத்த குமாரசாமி தெருவில் மேவாராம் என்பவர் துணிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவருடைய கடைக்குள் நுழைந்த மர்ம நபர், வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி இலவசமாக ஆடை கேட்டுள்ளார்.
பின்னர் கடையில் இருந்து தப்பியோட முயன்ற அவரை சக வியாபாரிகள் மடக்கிப் பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர்.