கோடை விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர்.
தருமபுரி மாவட்டம் பொன்னகரம் அடுத்த ஒகேனக்கலில் தற்போது மெயின் அருவி, சினி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் குளித்தும், பரிசல் சவாரி செய்தும், காவிரி ஆற்றின் அழகை ரசித்தும் விடுமுறையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.