ஈரோட்டில் சாலையில் நடந்து சென்ற நபரிடம் வழிபறியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுகாலனி பகுதியை சேர்ந்த முருகேசன் பணி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அவரை பின்தொடர்ந்த மர்ம நபர்கள், அவரிடமிருந்த செல்போன் மற்றும் ஆயிரத்து 200 ரூபாயை பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து முருகேசன் காவல்நிலையத்தில் புகாரளித்த நிலையில், வழிபறியில் ஈடுபட்ட அரவிந்த், குமார் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.