மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஸ்ரீகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
கீழையூரில் அமைந்துள்ள ஸ்ரீகாளியம்மன் கோயிலில், வாஸ்து சாந்தியுடன் யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்றதையடுத்து, மங்கல வாத்தியங்கள் முழங்க கடம்புறப்பாடு நடைப்பெற்றது.
இதனை தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கோவில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாரணையும் காண்பிக்கப்பட்டது.