மயிலாடுதுறையில் அமைந்துள்ள மாயூரநாதர் கோயிலில் நடைபெற்ற திருமுறை பயிற்சி வகுப்பில் பொது மக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான மாயூரநாதர் கோயிலில், 24-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில் பொதுமக்களுக்கு திருமுறை பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
இதில் 4 வயது சிறுவர்கள் முதல் 90 வயது முதியவர்கள் வரை பலரும் ஆர்வமுடன் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில், கோயில் வளாகத்தில் உள்ள பள்ளியில் தேவாரம், திருவாசகம் ஆகிய திருமுறைகள் குறித்து பொது மக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.