நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே சிகை அலங்கார கடை உரிமையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
வாகை குளம் பகுதியில் சிகை அலங்கார கடை உரிமையாளர் இசக்கி பாலா என்பவரை மர்மநபர்கள் வெட்டிக்கொலை செய்தனர், இவ்வழக்கில் கைதான வேம்பு சுடலை, சரவணன், சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.