தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் இரயில்வே மேம்பாலப் பணி விவகாரத்தில், மாவட்ட ஆட்சியர் தலையிட்டு விரைந்து தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லை – தென்காசி 4 வழி சாலை பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. 80 சதவீதத்திற்கும் மேலான சாலை பணிகள் முடிவுற்ற நிலையில், இரயில்வே மேம்பால பணிகள் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது.
மேலும், பாவூர்சத்திரத்தில் ரயில்வே கேட் தினமும் 15 முதல் 20 முறை அடைக்கப்படுவதால், பள்ளி, கல்லூரி செல்வோர் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனம் உள்ளிட்டவை செல்வதில் பெரும் பிரச்சனை ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.