திருச்செந்தூர் கடல் பகுதியில் ஜெல்லி மீன்களின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால் பக்தர்கள் பாதுகாப்பாக இருக்க கோயில் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கோயில் கடற்கரையில் ஜெல்லி மீன்கள் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால் பக்தர்கள் கவனமுடன் கடலில் குளிக்க கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.