இந்தியாவின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம் என இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
சீன ஆராய்ச்சிக் கப்பல்கள் இலங்கைக்கு வருவது தொடர்பாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
பொறுப்பான அண்டை நாடான இலங்கை, இந்தியாவின் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்காது என தெரிவித்தார்.
இலங்கை அண்டை நாடுகளுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக கூறிய அவர், மேலும், தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும், இந்தியாவுடன் இலங்கை இணைந்தே செயல்படும் என கூறினார்.