அரசியல் கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்கள் சாதி, மத ரீதியில் கருத்து தெரிவிக்கக் கூடாது என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவுக்கும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கும் தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பை அனுப்பியுள்ளது.
குறிப்பாக அரசியலமைப்புச் சட்டம் ஒழிக்கப்படும் போன்ற உணர்வுபூர்வமான கருத்துகளை வெளியிடக் கூடாது என காங்கிரசை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் அக்னிபத் திட்டத்தை முன்வைத்து காங்கிரஸ் வேட்பாளர்கள் பிரசாரம் செய்வதால், பாதுகாப்பு படைகளை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்றும் அக்கட்சிக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.