நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மர்ம மரணம் தொடர்பாக, சிபிசிஐடி போலீசார் அடங்கிய 15 பேர் கொண்ட குழு சம்பவ இடத்தில் ஆய்வு செய்தது.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரான ஜெயக்குமார் தனசிங், கடந்த 4-ம் தேதி தனது வீட்டின் தோட்டத்தில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் உடல் கருகி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.
அவர் இறப்பதற்கு முன் எழுதிய கடிதங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து ஜெயக்குமாரின் உறவினர்கள், நண்பர்கள், கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த நபர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இதில் முன்னேற்றமில்லாததைத் தொடர்ந்து, வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி உத்தரவிட்டிருந்தார்.
அதன்பேரில் சிபிசிஐடி ஆய்வாளர் உலக ராணி தலைமையிலான 15 பேர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர்.