பிரதமர் மோடி தனது குணநலம், செயல்பாடுகளால் நாட்டுக்கே முன்னுதாரணமாகத் திகழ்வதாக மண்டி பாஜக வேட்பாளரும், நடிகையுமான கங்கனா ரனாவத் தெரிவித்தார்.
ஹிமாசல பிரதேச மாநிலம் மண்டியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர்,
பெண்களின் நலனுக்காக பிரதமர் மோடி ஏராளமான திட்டங்களை நடைமுறைப்படுத்தியதாக குறிப்பிட்டார்.
தேர்தலில் தனக்கு வாய்ப்பு அளித்ததன் மூலம் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை பிரதமர் மோடி நிறைவேற்றி காட்டியதாகவும் கங்கனா ரனாவத் கூறினார்.