6-ம் கட்ட மக்களவை தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டுமென பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
2024 மக்களவை தேர்தலில் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டுள்ளார். மக்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்றும், அனைவரும் தேர்தலில் பங்குபெறும்போதே ஜனநாயகம் செழிக்கும் எனவும் பிரதமர் மோடி கூறியுள்ளார், பெண்களும், இளைஞர்களும் தவறாமல் வாக்களிக்க முன்வர வேண்டுமெனவும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.