நடிகர் விஜய் நடிக்கும் கோட் திரைப்படத்தின் சண்டைக்காட்சிகளின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைய உள்ளதாகக் கூறப்படும் நிலையில் புதுச்சேரி கடற்கரை சாலை, சினிமா நகரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இதில் கார் வெடிப்பது உள்ளிட்ட காட்சிகளின் படப்பிடிப்பு பலத்த பாதுகாப்புடன் நடத்தப்பட்டது.