வடகொரியாவின் உளவு செயற்கைகோள் நடுவானில் வெடித்து சிதறியது.
அந்நாட்டின் வடமேற்கு விண்வெளி மையத்திலிருந்து ராக்கெட்டில் கொண்டு செல்லப்பட்ட அந்த செயற்கைகோள், திடீரென இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால் நடுவானில் வெடித்தது.
இதனால் 2-வது உளவு செயற்கைகோளை விண்ணில் நிலைநிறுத்தும் தங்களது முயற்சி தோல்வியில் முடிவடைந்துவிட்டதாக வடகொரியா தெரிவித்துள்ளது. வெடித்து சிதறிய அந்த செயற்கைகோளின் பாகங்கள் கடலில் விழுந்துவிட்டதாக தெரிய வருகிறது.