நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் அரசு பேருந்து பழுதாகியதால், பயணிகள் கீழே இறங்கி பேருந்தை தள்ளிச் சென்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
ஈரோட்டில் இருந்து நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் வழியாக எஸ்.பி.பி. காலனி பேருந்து நிறுத்தம் வரை அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.
ஈரோட்டில் இருந்து வழக்கம் போல பயணிகளை ஏற்றிக்கொண்டு எஸ்.பி.பி. காலனி பகுதிக்கு சென்ற அரசுப் பேருந்து, மீண்டும் பள்ளிபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்போது, காவேரி ஆர்.எஸ். என்ற பகுதியில் பேருந்து பழுதாகி நின்றது. இதனைத் தொடர்ந்து, பயணிகள் கீழே இறங்கி பேருந்தைத் தள்ளி இயக்க முயன்றனர்.
நீண்ட நேரம் போராடியும் பேருந்தை இயக்க முடியாததால், பயணிகள் மாற்றுப் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.