கடலூர் மாவட்டம், சிறுபாக்கம் அருகே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பற்றி விபத்துக்குள்ளானது.
இரும்பு கம்பியை ஏற்றிக் கொண்டு சிறுபாக்கம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சேலம் நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர மரத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சேதமடைந்த மின் கம்பிகள் அறுந்து விழுந்ததில் லாரி முழுவதும் மளமளவென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர், மின்னிணைப்பைத் துண்டித்துவிட்டு தண்ணீரை பீய்ச்சிடித்து தீயை அணைத்தனர்.
மேலும் விபத்தில் காயமடைந்த லாரி ஓட்டுநர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.