அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே போலி மருத்துவர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர்.
ஜெயங்கொண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அல்லோபதி மருத்துவம் படிக்காத பலர், பொதுமக்களுக்கு சிகிச்சையளித்து வருவதாக புகார் எழுந்தது.
அதன் பேரில் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில், மாவட்ட மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது போலி மருத்துவம் பார்த்து வந்த பத்மநாபன், பாண்டியன் மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களது வீட்டிலிருந்து ஆங்கில மருந்து, மாத்திரைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.