கன்னியாகுமரியில் அமைந்துள்ள புகழ் பெற்ற பகவதியம்மன் திருக்கோவிலில் பிரதமர் மோடி பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தார்.
கன்னியாகுமரியில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டத்தில் மூன்று நாள் தியானம் செய்வதற்காக பிரதமர் மோடி உற்சாகத்துடன் தமிழகம் வருகை தந்தார்.
முதலில், கன்னியாகுமரியில் புகழ் பெற்ற பகவதியம்மன் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார்.
அவருக்கு, திருக்கோவில் நிர்வாகம் சார்பில் பூர்ணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அதனை மிகுந்த மிகழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட மோடி, பின்னர், திருக்கோவிலை வலம் வந்து, அம்மனை மனம் உருகி சாமி தரிசனம் செய்தார்.
தொடர்ந்து, பிரதமர் மோடிக்கு, திருக்கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் மற்றும் பகவதியம்மன் புகைப்படம் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, விவேகானந்தர் பாறைக்கு, விவேகானந்தர் என்ற படகு மூலம் சென்றடைந்தார். அங்கு அவர் மூன்று நாள் தங்கி தியானம் மேற்கொள்கிறார்.
பிரதமர் தியானம் செய்யும் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், இந்திய கடற்படைக்குச் சொந்தமான மூன்று கடற்படை படகுகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.