கேரளா கடற்கரை பகுதிகளில் அலைகள் அதிகமாக எழும்ப வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கேரளாவில் பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்காக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நாளை கோழிக்கோடு, வயநாடு உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும், ஜூன் 2ஆம் தேதி பத்தனம்திட்டா, ஆலப்புழா உள்ளிட்ட 12 மாவட்டங்களிலும், ஜூன் 3ஆம் தேதி கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் உள்ளிட்ட 6 மாவட்டங்களிலும் வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் கேரள கடற்கரையில் இன்று இரவு வரை 1 புள்ளி 4 முதல் 2 புள்ளி 8 மீட்டர் உயர அலைகள் மற்றும் புயல் எழும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.