மின் தடையில்லா மாநிலமாக தமிழகம் திகழ்வதாக மின்சாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2021-ம் ஆண்டில் 32 ஆயிரத்து 595 மெகா வாட்டாக இருந்த மொத்த மின் நிறுவுதிறன் 36 ஆயிரத்து 671 மெகாவாட்டாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 ஆயிரத்து 779 எம்.வி.ஏ. நிறுவு திறனுடன் 54 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 2-ம் தேதி 20 ஆயிரத்து 830 மெகாவாட் உச்ச மின் தேவையை எவ்வித தடங்கலுமின்றி வழங்கி சாதனை படைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது.
இதேபோல், 17 ஆயிரத்து 785 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயரழுத்த மின் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
நெசவாளர்கள், வீட்டு உபயோகதாரர்கள், தொழில் நிறுவனங்கள் என பல்வேறு தரப்பினருக்கும் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.