கோடை வெயில் சுட்டெரிப்பதால் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பை ஒத்தி வைக்க வேண்டுமென அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து வரும் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்திருப்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார்.
கோடை வெயிலால் மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ள நிலையில், ஜூன் முதல் வாரத்திலேயே பள்ளிகளைத் திறப்பது நியாயமற்றது என்றும் அவர் கூறியுள்ளார்.
(NEXT)அண்டை மாநிலமான புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு வரும் 12-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர்,
(NEXT)தமிழகத்தில் மட்டும் ஜூன் முதல் வாரத்திலேயே பள்ளிகளை திறப்பது நியாயமற்றது என்றும் கூறியுள்ளார்.
(NEXT)வெயிலின் தீவிரத்தை உணர்ந்து, தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பை ஜூன் மாதத்தின் இரண்டாம் பாதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்றும் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.(OUT)