மதுபானக் கொள்கை வழக்கில் இடைக்கால ஜாமின் முடிவடைவதால், நாளை மறுதினம் திகார் சிறையில் சரணடைய உள்ளதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமின் நாளையுடன் முடிவடையவுள்ளது.
இதனை முன்னிட்டு, அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள வீடியோவில், நாளை மறுதினம் தான் திகார் சிறையில் சரணடைய உள்ளதாகத் தெரிவித்தார்.
தான் இந்த முறை எவ்வளவு நாள் சிறையில் இருக்க நேரிடும் எனத் தெரியவில்லை எனக் கூறியுள்ள அவர், சிறையிலிருந்து வெளியே வந்ததும் பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தொடங்கவுள்ளதாகத் தெரிவித்தார்.