உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி, தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் சுகாதார ஆய்வாளர் சங்கரன், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் போல் நடித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
புகையிலையை பயன்படுத்தியதால் கழுத்தில் புற்றுநோய் கட்டி ஏற்பட்டதாக நடித்து, கும்பகோணம் பொது மருத்துவமனை மற்றும் அதை ஒட்டி உள்ள பகுதிகளில் அவர் விழிப்புணர்வை மேற்கொண்டார்.
“புகையிலை பொருட்களை பயன்படுத்த வேண்டாம்” என்ற முழக்கத்தை முன்வைத்து இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.