கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி மூன்றாவது நாளாக தியானத்தை மேற்கொண்டு வருகிறார்.
பிரதமர் மோடி நேற்று முன்தினம் மாலை விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு வருகை தந்தார்.
அங்குள்ள தியான மண்டபத்தில் அமர்ந்து மாலை 6 மணிக்கு மேல் தியானத்தை தொடங்கினார்.
இந்நிலையில், இன்று காலையில் சூரிய நமஸ்காரம் செய்வதற்காக தியானத்தை நிறுத்திவிட்டு வெளியே வந்த பிரதமர் மோடி சிறிது நேரம் நடைபயிற்சி மேற்கொண்டார், பின்னர், மீண்டும் உள்ளே சென்று தியானத்தை தொடர்ந்தார்.
இன்று பிற்பகல் வரை அவர் சுமார் 45 மணி நேரம் அவர் தியானம் செய்கிறார். பிற்பகல் 3 மணி அளவில் அவர் தியானத்தை நிறைவு செய்வார் என தகவல் வெளியாகிள்ளது.