2024ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள், பாஜகவின் வெற்றியை உறுதிபடுத்தியுள்ளது. மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராவார் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிந்துள்ளது.
இந்தியாவின் 18வது மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. 2024ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஏழுகட்டங்களாக நடந்து இன்றுடன் நிறைவடைந்தன. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், மக்களவை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது.
பெரும்பாலான டிவி சேனல்கள் பாஜ கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடிக்கும் என தெரிவிக்கின்றன. தமிழகத்தில் பல இடங்களில் பாஜகவின் வெற்றி உறுதியாகி உள்ளது.
அதன் விபரம்:
மொத்த இடங்கள்: 543 இடங்கள்
பெரும்பான்மை: 272 இடங்கள்
நியூஸ் எக்ஸ்
பா.ஜ., கூட்டணி: 371
இண்டியா கூட்டணி: 125
பிற: 45
நியூஸ் நேசன்
பா.ஜ., கூட்டணி: 342 முதல் 378 இடங்கள்
இண்டியா கூட்டணி: 153 முதல் 179 இடங்கள்
ரிபப்ளிக் டிவி:
பா.ஜ., கூட்டணி: 371 இடங்கள்
இண்டியா கூட்டணி: 127
இந்தியா டிவி;
பா.ஜ., கூட்டணி: 371
இண்டியா கூட்டணி 125
என்.டி.வி. (ரிப்பளிக் பாரத் பி-மார்க்)
பா.ஜ., கூட்டணி : 359
இண்டியா கூட்டணி: 154
ரிபப்ளிக் பாரத் மேட்ரிக்ஸ்
பா.ஜ., கூட்டணி: 353 முதல் 368
இண்டியா கூட்டணி: 118 முதல் 133 இடங்கள்
பிற கட்சிகள் : 43-48 இடங்கள்
டி.வி.5 தெலுங்கு
பா.ஜ., கூட்டணி: 359
இண்டியா கூட்டணி 154
பிற: 31
இந்தியா நியூஸ் டி. டைனமிக்ஸ்
பா.ஜ., கூட்டணி: 371
இண்டியா கூட்டணி 125
பிற: 47
ஜான்கிபாத்
பா.ஜ., கூட்டணி: 362 முதல் 392 இடங்கள்
இண்டியா கூட்டணி: 141 முதல் 161 இடங்கள்