3டி-பிரிண்டிங் ராக்கெட்: இந்தியா புது சாதனை!
Sep 12, 2026, 01:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

3டி-பிரிண்டிங் ராக்கெட்: இந்தியா புது சாதனை!

Murugesan M by Murugesan M
Jun 1, 2024, 09:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உலகின் முதல் 3டி பிரிண்டிங் ராக்கெட்டை கடந்த வாரம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை படைத்து இருக்கிறது ஸ்டார்ட் அப் விண்வெளி நிறுவனமான அக்னிகுல் காஸ்மோஸ். அது குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

3டி-பிரிண்டிங் ராக்கெட் என்பது, 3D-பிரிண்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஒரு ராக்கெட்டாகும்.

பெரும்பாலான பாரம்பரிய ராக்கெட்டுகளுடன் ஒப்பிடும்போது, ​​3D-பிரிண்டிங் வகை ராக்கெட்டுக்கள், அதிக எரிபொருள் திறன் கொண்டதாகவும், எடையில் குறைவாகவும், மிக குறுகிய காலத்தில் உருவாக்கக் கூடியதாகவும் அமைகிறது.

செயற்கைக்கோள் ஏவுதல் வாகனங்களாக உருவாக்கப்படும் 3D-பிரிண்டிங் ராக்கெட்டுகள், குறிப்பிட்ட நேரத்துக்குள், குறைந்த பூமி சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள்களைக் கொண்டுபோய் நிறுத்தி விடுகின்றன.

இப்போது செயற்கை கோள்களைச் சுமந்து செல்லும் 3D-பிரிண்டிங் ராக்கெட்டுகள், எதிர்காலத்தில் விண்வெளி பயணிகளை ஏற்றிக் கொண்டு செவ்வாய் கிரகப் பயணங்களுக்குப் பயன்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

சென்னை இந்திய தொழில் நுட்ப கழகத்தைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமே அக்னிகுல் காஸ்மோஸ். இந்த நிறுவனமே, ‘சிங்கிள் பீஸ் 3டி-பிரிண்டட் இன்ஜின்’ மூலம் இயங்கும் உலகின் முதல் ராக்கெட்டை தயாரித்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ளது.

அக்னிகுல் காஸ்மோஸ் உள்நாட்டிலேயே உருவாக்கிய இந்த ராக்கெட் ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப் பட்டது.

உள்நாட்டு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட, 3டி பிரிண்டட் எஞ்சின் விண்வெளித்துறையில் ஒரு புதிய சாதனை என்று அக்னிகுல் நிறுவனம் அறிவித்துள்ளது.

அக்னிபான் என்று பெயரிடப்பட்ட இந்த ராக்கெட் 30 கிலோ முதல் 300 கிலோ எடையுள்ள செயற்கை கோளுக்கான பேலட்டை குறைந்த புவி சுற்றுப்பாதையில் கொண்டு நிறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய் போன்ற எரிபொருள் மற்றும் திரவ ஆக்சிஜனில் இயங்கும் செமி கிரையோஜெனிக் இன்ஜின் மூலம் இயக்கப்படும் இந்தியாவின் முதல் ராக்கெட் என்ற சிறப்பை பெற்றுள்ளது இந்த அக்னி பான்.

வர்த்தக செயற்கைக்கோள் சந்தையில், உள்நாட்டு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட “சிங்கிள் பீஸ் 3டி பிரிண்டட் எஞ்சின்” என்று அழைக்கப்படும் இந்த ராக்கெட், இந்திய விண்வெளி துறை வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் என்று அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் விண்வெளி பொறியியல் பேராசிரியரும், அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவன ஆலோசகருமான சத்தியநாராயணன்.ஆர்.சக்கரவர்த்தி , “3டி பிரிண்டிங் மூலம், 1,000-க்கும் மேற்பட்ட பாகங்கள் கொண்ட ஒரு இயந்திரத்தை மூன்றே நாட்களில் உருவாக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

ஒரு செயற்கோளை விண்ணில் செலுத்த ஆகும் வணிகச் செலவுகளை இந்த சிங்கிள் பீஸ் 3டி-பிரிண்டட் இன்ஜின் வெகுவாக குறைக்கும் என்றும், அதனால் இந்திய விண்வெளித்துறையின் வருமானம் அதிகரிக்கும் என்றும் தெரிய வருகிறது.

இஸ்ரோ மற்றும் IN-SPACE உதவியுடன், தயாரிக்கப் பட்டுள்ள இந்த 3டி பிரிண்டிங் ராக்கெட் வடிவமைப்பின் வெற்றி, பலராலும் பாராட்டப்படுகிறது. தனியார் விண்வெளித் துறையில் புதுமையான முன்னேற்றங்களுக்கு மத்திய அரசு கொடுத்து வரும் ஆதரவின் காரணமாகவே இது சாத்தியமானது என்று அக்னிகுல் காஸ்மோஸ் தெரிவித்துள்ளது.

எல்லா இடங்களிலிருந்தும், எந்த நேரத்திலும், மிக குறைந்த விலையில் செலுத்தக்கூடிய வகையில், இந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அக்னிகுல் காஸ்மோஸ், செயற்கை கோளை செலுத்தும் வாடிக்கையாளர் தேவைகளுக்கு ஏற்ப, மலிவு விலையில் அவர்களுக்கு ஏற்ப பிரத்யேகமான ராக்கெட்டுக்களை உருவாக்கவும் திட்டமுள்ளதாக கூறியிருக்கிறது.

‘அக்னிபான்’, மற்றும் மொபைல் ஏவுதளமான ‘தனுஷ்’, இந்த இரண்டும், ஒன்றுக்கொன்று இணக்கமாக செயல்படும் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மொபைல் ஏவுதளத்திலிருந்து எந்த இடத்திலிருந்தும் ஏவக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ராக்கெட்டுக்கு தனுஷ் என்று பெயரிடப்பட்டுள்ளது. ​​இந்த ராக்கெட்டின் மூலம் 30 கிலோ முதல் 300 கிலோ வரையிலான பேலோடுகளை பறக்கவிட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்னிகுல் காஸ்மோஸ் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் ‘அக்னிபான்’ ராக்கெட்டை வெற்றிகரமாக செலுத்தியது, விண்வெளி தொழில்நுட்பத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

அக்னிகுல் காஸ்மோஸ் ஸ்டார்ட் அப் நிறுவனம், 3D பிரிண்டிங் தொழில்நுட்பத்தில், புதுமையான, நம்பகமான மற்றும் செலவு குறைந்த ராக்கெட்டை செலுத்தி , தன் விண்வெளி தொழில்நுட்பத் திறமையை நிரூபித்துள்ளது.

விண்வெளித் துறையில், மேலும் பல புதுமையான சாதனைகளை நிகழ்த்தும் எனக் கூறப்படும் அக்னிகுல் காஸ்மோஸ் , IN-SPAce மற்றும்இஸ்ரோவின் உதவியுடன், விண்வெளியை அனைவரும் எளிதில் அணுகக்கூடிய ஒரு இடமாகமாற்றி அமைக்கும் எனவும் விண்வெளித்துறை விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

நாளுக்கு நாள் விண்வெளித் துறையில் இந்தியா, புதிய சாதனைகளைப் படைத்து ,உலகத்தை ஆச்சரியப்பட வைத்துக் கொண்டிருக்கிறது என்றால் மிகையில்லை.

Tags: 3D-Printing Rocket: India's New Achievement!
Share
Tweet
SendShare
Previous Post

பாஜ கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும்! – பரபரப்பான கருத்து கணிப்பு முடிவு!

Next Post

லண்டன் TO இந்தியா 100 டன் தங்கம் வந்த பின்னணி!

Related News

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

Load More

அண்மைச் செய்திகள்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies