லண்டன் TO இந்தியா 100 டன் தங்கம் வந்த பின்னணி!
Sep 12, 2026, 02:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லண்டன் TO இந்தியா 100 டன் தங்கம் வந்த பின்னணி!

Murugesan M by Murugesan M
Jun 1, 2024, 09:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இங்கிலாந்து வங்கியில் இந்தியா வைத்திருக்கும் தங்கம் இருப்பிலிருந்து 100 டன் தங்கத்தை, ரிசர்வ் வங்கி இந்தியாவுக்குக் திரும்ப கொண்டு வந்துள்ளது. வரும் மாதங்களில் இன்னும் கூடுதல் தங்கத்தைக் கொண்டு வர இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.

தனி மனிதனுக்கு மட்டுமில்லை நாடுகளுக்கும் தங்கமே சிறந்த முதலீடாக கருதப் படுகிறது.
குறிப்பாக ஒரு நாட்டின் பொருளாதாரம் சீர்குலையும் போது, அதில் இருந்து தப்பிக்க உதவும் நம்பிக்கையான சேமிப்பு பொருளாக உலக நாடுகள் தங்கத்தைப் பார்க்கின்றன.

மேலும் ஒரு நாட்டின் நிதி ஸ்திரத் தன்மையை அந்நாட்டின் தங்கத்தின் கையிருப்பை வைத்தே கணக்கிடப் படுகின்றன. எனவே, தங்கத்தை அதிக அளவில் கையிருப்பில் வைத்துக் கொள்வதற்கு ஆர்வம் காட்டும், உலக நாடுகள் எல்லாம் போட்டி போட்டு தங்கத்தில் முதலீடு செய்கின்றன.

இந்தியாவும் இதற்கு விதிவிலக்கில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியாவின் ரிசர்வ் வங்கி தங்கத்தை வாங்கத் தொடங்கியது. அதுவும் சமீப ஆண்டுகளாக ரிசர்வ் வங்கி, அதிக அளவில் தங்கத்தை வாங்கி குவித்து வருகிறது.

கடந்த ஆண்டு முழுவதும் ரிசர்வ் வங்கி 16 டன் தங்கத்தை தனது இருப்பில் சேர்த்திருந்த நிலையில் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் 27 டன் தங்கத்தை வாங்கியது. கடந்த மார்ச் மாத நிலவரப் படி, ரிசர்வ் வங்கியின் தங்க கையிருப்பு 822.1 டன்னாக இருந்தது.

பல நாடுகளும் , பாங்க் ஆப் இங்கிலாந்து என்னும், பிரிட்டன் மத்திய வங்கியில் தங்கள் தங்கத்தை வைத்து பாதுகாத்து வருகின்றன. இந்தியாவும் பிரிட்டன் வங்கியில் 413.8 டன் தங்கதத்தை வைத்திருந்தது.

இந்த நிலையில் தான், 100 டன் தங்கத்தை பிரிட்டன் வங்கியிலிருந்து, இந்தியாவுக்கு ரிசர்வ் வங்கி கொண்டு வந்துள்ளது. இந்த 100 டன் தங்கம் என்பது வெளிநாடுகளில் இந்தியா வைத்திருக்கும் தங்க கையிருப்பில் நான்கில் ஒரு பங்கு என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

சிறப்பு விமானம் மூலம் மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கொண்டு வரப்பட்ட 100 டன் தங்கம், மும்பையின் மின்ட் சாலை மற்றும் நாக்பூரில் உள்ள ரிசர்வ் வங்கியின் பழைய அலுவலக கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

வாங்கும் தங்கத்தை எங்கே சேமித்து வைக்க வேண்டும் என்பதை அண்மையில் மதிப்பாய்வு செய்த ரிசர்வ் வங்கி, வெளிநாடுகளில் தங்கம் கையிருப்பு அதிகரித்து வருவதால், சில தங்கத்தை இந்தியாவுக்குத் திரும்ப பெற முடிவு செய்யப்பட்டது என்றும், அதற்கு மத்திய அரசின் ஒப்புதல் பெற்ற பின், தற்போது 100 டன் தங்கம் கொண்டு வரப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தங்கத்தைக் கொண்டு வருவதற்காக ,மத்திய அரசிடமிருந்து, சுங்கத் துறை வரிவிலக்கு பெற்றிருக்கும் ரிசர்வ் வங்கி, வரும் மாதங்களில் மேலும் சில டன் தங்கத்தை வெளிநாட்டு வங்கிகளிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு வரவும் என்று ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உலக அளவில் அதிக தங்கம் கையிருப்பு கொண்டுள்ள முதல் 10 நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Background of 100 tons of gold from London to India!
Share
Tweet
SendShare
Previous Post

3டி-பிரிண்டிங் ராக்கெட்: இந்தியா புது சாதனை!

Next Post

டிஜிட்டல் மயமாகும் டாஸ்மாக் கடைகள் ஆர்வம் காட்டுவது ஏன்?

Related News

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

Load More

அண்மைச் செய்திகள்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies