சிறையில் இருந்துகொண்டே ஜம்மு- காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவை மக்களவைத் தேர்தலில் என்ஜினீயர் ரஷீது தோற்கடித்துள்ளார்.
பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளித்த வழக்கில், என்ஜினீயர் ரஷீது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருந்தவாறே ஜம்மு- காஷ்மீர் பாரமுல்லா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட அவர், ஒமர் அப்துல்லாவை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.