குஜராத் மாநிலத்தின் காந்திநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா சுமார் ஏழரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.
நாடு முழுவதும் பதிவான மக்களவை தேர்தல் மற்றும் 4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களின் முடிவுகள் இன்று எண்ணப்பட்டன.
இந்நிலையில் எல்.கே.அத்வானி, வாஜ்பாய் போன்ற முன்னணி தலைவர்கள் வெற்றி பெற்ற தொகுதியான குஜராத் மாநிலம் காந்திநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா 10 லட்சத்து 10 ஆயிரத்து 972 வாக்குகளைப் பெற்றார்.
அதன்படி அத்தொகுதியில் போட்டியிட்ட அமித்ஷா, 7 லட்சத்து 44 ஆயிரத்து 716 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.