தேசிய ஜனநாயக கூட்டணி வரலற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்றுள்ளது” என பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் ஹாட்ரிக் வெற்றியைக் கொண்டாடும் வகையில், டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்தார்.
அவருக்கு, மூத்த தலைவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து பேசிய பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, “மாபெரும் தேர்தல் வெற்றிக்கு உழைத்த பாஜக மற்றும் கூட்டணி கட்சியினருக்கு நன்றி” எனவும், “நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவதில் பிரதமர் மோடி என்றும் முதன்மையானவராக திகழ்ந்து வருகிறார்” என்றும் தெரிவித்தார்.
மேலும், “நாடு கடினமான நேரங்களில் இருந்தபோது, அதனை சிறப்பாக வழிநடத்தியவர் மோடி” என்று புகழாரம் சூட்டினார்.
தொடர்ந்து பேசியவர், “கேரளாவிலும் தாமரை மலர்ந்துள்ளது” எனவும், “ஆந்திர பிரதேசத்தில், தேசிய ஜனநாயக் கூட்டணி ஆட்சி அமைக்கும்” என்று உறுதிபடத் தெரிவித்தார்.
















