நீட் நுழைவு தேர்வு முடிவுகள் வெளியீடு!
Jul 29, 2026, 01:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீட் நுழைவு தேர்வு முடிவுகள் வெளியீடு!

Murugesan M by Murugesan M
Jun 5, 2024, 10:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் 8 தமிழக மாணவர்கள் உட்பட 67 பேர் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு தேசிய தேர்வுகள் முகமை மூலம் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்தாண்டு நடைபெற்ற நீட்நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் 571 நகரங்களில் நடத்தப்பட்ட நிலையில் 23 லட்சத்து 33 ஆயிரத்து 297 மாணவர்கள் தேர்வை எழுதினர்.

இதில் தமிழகத்தில் இருந்து ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு மையங்களில் பலத்த பாதுகாப்புடன் தேர்வை எழுதினர். இந்நிலையில் நீட் நுழைவு தேர்வுக்கான தேர்வு முடிவுகளை தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டது.

இந்த தேர்வில் நாடு முழுவதும் மொத்தம் 13 லட்சத்து 16 ஆயிரத்து 268 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட பூஜ்யம் புள்ளி 2 சதவீதம் அதிகம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்தது.

தமிழகத்தை பொறுத்தவரை ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 920 மாணவர்கள் தேர்ச்சி பெற்று அசத்தினர். இதில் 8 மாணவர்கள் முழு மதிப்பெண்களான 720 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர்.

இந்த 8 தமிழக மாணவர்கள் உட்பட நாடு முழுவதும் மொத்தம் 67 மாணவர்கள் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர்.

Tags: NEET Entrance Exam Results Released!
ShareTweetSendShare
Previous Post

நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவதில் பிரதமர் மோடி முதன்மையானவர்! – ஜெ.பி. நட்டா

Next Post

6-வது முறையாக முதலமைச்சாராகும் வாய்ப்பை இழந்தார்!

Related News

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies