இந்தியா மற்றும் தாய்லாந்து இடையேயான வலுவான பன்முக இருதரப்பு உறவுகள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.
தாய்லாந்து பிரதமர் திரு ஸ்ரேத்தா தவிசினுடன், பிரதமர் நரேந்திர மோடி இன்று மிகவும் அன்பான, நட்புமிக்க வகையில் தொலைபேசி மூலம் உரையாடல் நடத்தினார்.
இந்தியாவில் சமீபத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக பிரதமருக்கு தாய்லாந்து பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.
வர்த்தகம் மற்றும் முதலீடு, கலாச்சாரம் மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகள் போன்ற பல்வேறு துறைகளில் பன்முகத்தன்மை கொண்ட மற்றும் வலுவான இருதரப்பு உறவுகளை மேலும் உறுதிப்படுத்துவது குறித்து இரு பிரதமர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.