பாஜக கனவை சிதைத்த மகாராஷ்டிரா காரணம் என்ன?
Oct 14, 2025, 08:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜக கனவை சிதைத்த மகாராஷ்டிரா காரணம் என்ன?

Web Desk by Web Desk
Jun 6, 2024, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரபிரதேச மாநிலத்துக்குப் பின் அதிக நாடாளுமன்றத் தொகுதிகளை உடைய மகாராஷ்டிராவில் பாஜக எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை. இதற்கான காரணம் என்ன? என்பது பற்றி பார்க்கலாம்..!

கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகவும் நிலையற்ற அரசியலைக் கொண்ட ஒரு மாநிலம் எது என்றால் அது மகாராஷ்டிரா தான்.

7 கட்டங்களாக நடந்து முடிந்த மக்களவை தேர்தல் , 48 தொகுதிகளை உடைய மகாராஷ்டிராவில் 5 கட்டங்களாக நடைபெற்றது.

பரபரப்பான அரசியல் சூழலால், சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டாக உடைந்தன . அதனால்,மகாராஷ்டிராவில் மூன்று விதமான கூட்டணிகள் ஏற்பட்டன. மூன்று விதமான போட்டிகள் நடந்தன. அதாவது பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் சரத்பவாருக்கும் அஜித் பவாருக்கும், ஏக்நாத் ஷிண்டே வுக்கும் உத்தவ் தாக்கரே க்கும் தான் தேர்தலில் போட்டி இருந்தன.

பாஜக ,ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா ,அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் , ராஷ்ட்ரிய சமாஜ் பக்ஜா ஆகிய கட்சிகள் ஒரு கூட்டணியில் மஹாயுத்தி என நின்றன.

அதில், போட்டியிட்ட 28 தொகுதிகளில் 9 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. 14 இடங்களில் போட்டி இட்ட ஏக்நாத் ஷிண்டே சிவசேனா 7 இடங்களிலும், அஜித் பவாரின் தேசிய வாத காங்கிரஸ் 5 இடங்களில் போட்டியிட்டு ஒரே ஒரு இடத்தைக் கைப் பற்றியிருக்கிறது.

இன்னொரு புறம் காங்கிரஸ் , உத்தவ் தாக்கரே சிவசேனா, சரத் பாவரின் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை மகா ஆகாதி என ஒரு கூட்டணியில் நின்றன. அதில் 21 இடங்களில் போட்டியிட்ட உத்தவ் தாக்கரே சிவசேனா 9 இடங்ககளில் வெற்றி பெற்றுள்ளது.

17 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 13 இடங்களில் வெற்றி பெற்றுளளது. சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 10 இடங்களில் போட்டியிட்டு அதில் 8 இடங்களைக் கைப் பற்றியுள்ளது.

2014 மற்றும் 2019 ஆகிய தேர்தல்களில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 41 இடங்களை வென்றிருந்த மாநிலத்தில் இப்போது பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மும்பையில் உள்ள ஆறு இடங்களிலும் பாஜக கூட்டணியே வெற்றி பெற்றது . ஆனால் இம்முறை வடக்கு மும்பையில் மட்டுமே பாஜகவின் வேட்பாளர் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வெற்றி பெற்றுள்ளார்.

ஏக்நாத் ஷிண்டே சிவசேனா மும்பை வடமேற்கு தொகுதியை வெறும் 48 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறார். மீதி இடங்களை காங்கிரசும் உத்தவ் தாக்கரே வும் கைப் பற்றினர்.

சிவசேனா கட்சி இரண்டாக உடைந்ததற்கு பாஜக தான் காரணம் என்ற எண்ணமும், உத்தவ் தாக்கரே மேல் ஏற்பட்ட அனுதாபமும் மும்பையில் பாஜக கூட்டணி வாக்குகள் பெறமுடியாமல் போனதற்கு காரணமாக பார்க்கப் படுகிறது.

அடுத்ததாக, மராத்வாடாவை பொருத்தவரை இடஒதுக்கீடு விவகாரத்தில் மராத்தியர்களின் சீற்றத்துக்கு, பாஜக பலியாகி உள்ளது என்றே பார்க்க முடிகிறது.

நாந்தேட், பீட், ஜல்னா, லத்தூர், ஔரங்காபாத், ஹிங்கோலி, உஸ்மானாபாத் மற்றும் பர்பானி ஆகிய 8 தொகுதிகளில் 2019 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக 4 இடங்களில் பாஜகவும் 3 இடங்களில் சிவசேனாவும் வெற்றி பெற்றிருந்தது.

ஆனால் இந்த முறை இருப்பினும், இந்த முறை, உத்தவ் தாக்கரே சிவசேனா மூன்று இடங்களையும், காங்கிரஸ் மூன்று இடங்களையும் கைப்பற்றி விட்டது. இது பாஜக கூட்டணிக்கு ஒரு பெரிய இழப்பாக போய் விட்டது.

அடுத்து , கிழக்கு மகாராஷ்டிராவில் உள்ள விதர்பா தொகுதிகள் ஒரு காலத்தில் காங்கிரஸ் கோட்டை எனச் சொல்லப்படும். 2019 ஆம் ஆண்டு பாஜக சிவசேனா கூட்டணி , விதர்பாவில் உள்ள 10 இடங்களில் ஆளுக்கு நான்கு நான்கு என 8 தொகுதிகளைக் கைப்பற்றி இருந்தது.

ஆனால் இந்த தேர்தலில் , இந்த தொகுதிகளிலும் பாஜகவுக்குப் பின்னடைவே.நாக்பூரில் போட்டியிட்ட மத்திய மைச்சர் நிதின் கட்கரி கூட சென்ற முறையை விட குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்று இருக்கிறார்.

மொத்தமாக பார்க்கும் போது , ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் இரண்டு பேருமே மகாராஷ்டிராவில் பாஜகவின் மக்கள் செல்வாக்கை வெகுவாக குறைத்து விட்டார்கள் என்பதையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

இந்நிலையில் விரைவில் மகாராஷ்டிராவில் சட்ட மன்ற தேர்தல் வர இருக்கிறது. பாஜக இழந்ததை மீட்க கடுமையாக களப்பணி ஆற்றவேண்டும் என்கிறார்கள் பாஜக தொண்டர்கள்.

Tags: What is the reason for Maharashtra that destroyed BJP's dream?
ShareTweetSendShare
Previous Post

மக்களவை உறுப்பினர்களின் பட்டியல் குடியரசுத்தலைவரிடம் வழங்கப்பட்டது!

Next Post

மேற்கு வங்கத்தின் தேர்தல் முடிவுகள்! – பாஜக Vs மம்தா

Related News

GOOD NEWS மக்களே : ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் வேலை பறிபோகாதாம் – கூடுதல் பணியாளர்களை நியமிக்க கூகுள் திட்டம்!

பாக்.,கை தாலிபான்கள் பந்தாடும் பின்னணி : இந்தியா நிலைப்பாடு என்ன?

பாக்., தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த தலிபான் : மல்லுக்கட்டும் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான்!

ராஜஸ்தானில் பேய்கள் உலா : இரவில் தங்க தடை – அமானுஷ்யம் நிறைந்த திகில் கிராமம்!

படுபாதாளத்தில் பாகிஸ்தான் : கடையை சாத்தும் MNC நிறுவனங்கள்!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் இடையே மலரும் புதிய உறவு : பாக்.வயிற்றில் புளியை கரைத்த கூட்டறிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவின் அறிவிப்பால் ஆட்டம் காணும் அமெரிக்கா : தடுமாறும் சர்வதேச CHIP விநியோக சங்கிலி!

விவாதத்தை கிளப்பிய பிரபல டிவி நிகழ்ச்சி – கற்பித்தலில் குறைபாடா? பெற்றோர் வளர்ப்பா? – குறை எங்கு உள்ளது?

மேற்கு வங்கத்தில் தொடரும் பாலியல் கொடூரம் : கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு!

எப்போது பயன்பாட்டுக்கு வரும் கணேசபுரம் மேம்பாலம் – ஏக்கத்துடன் காத்திருக்கும் மக்கள்!

திமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் சவுக்கடி – எல். முருகன்

கரூர் நெரிசல் வழக்கு – சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

பிரபாகரன் மீது சிறு கீறல் விழுந்தாலும் திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் – அதிமுக

8 மாதங்களில் 8 போர்களை நிறுத்தியுள்ளேன் – அமெரிக்க அதிபர் டிரம்ப்

லண்டனின் தொழிலதிபர் வினோத் சேகர் மீது மர்ம நபர்கள் தாக்குதல் : துணிச்சலுடன் போராடி காப்பாற்றிய மனைவி!

இஸ்ரேல்- காசா இடையேயான போர் நிறுத்தம் அமல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies