சென்னையில் அதிமுக வாக்கு சதவீதம் சரிந்தது ஏன்?
Oct 14, 2025, 01:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் அதிமுக வாக்கு சதவீதம் சரிந்தது ஏன்?

Web Desk by Web Desk
Jun 7, 2024, 07:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடந்த முடிந்த மக்களவை தேர்தலில் சென்னையில் இரண்டு தொகுதிகளில் பாஜக இரண்டாம் இடத்தை பெற்ற நிலையில், அதிமுக குறைந்த வாக்குகளை மட்டுமே பெற்று மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதிமுகவின் வாக்கு சதவீதம் பெருமளவில் சரிந்திருப்பது அக்கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், பல தொகுதிகளில் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. அதிமுகவை விட அதிகமான வாக்குகள் பெற்று பாஜக 12 தொகுதிகளில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தென் சென்னை,மத்திய சென்னை,வட சென்னை ஆகிய மூன்று தொகுதிகளிலும் அதிமுக தோல்வி அடைந்துள்ளது.

தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் ,பாஜக சார்பில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனும் , அதிமுக சார்பில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தனும் போட்டியிட்டனர்.

ஏற்கெனவே ஜெயலலிதா காலத்தில், தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெயவர்த்தன்,இம்முறை டெபாசிட் இழந்துள்ளார்.

பதிவான வாக்குகளில் 2 லட்சத்து 90 ஆயிரத்து 683 வாக்குகள் பெற்று பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் இரண்டாம் இடத்தைப் பெற்றிருக்கிறார்.

தென் சென்னையில் தியாகராய நகரில் 36 சதவீத வாக்குகளும், வேளச்சேரியில் 30 சதவீத வாக்குகளும் மற்றும் விருகம்பாக்கத்தில் 29 சதவீத வாக்குகளும் பெற்றுள்ள பாஜக, மொத்தமாக, தென் சென்னை தொகுதியில் 20 சதவீத வாக்குகள் பெற்று சாதனை படைத்துள்ளது.

1991, 2009, 2014 ஆம் ஆண்டுகளில் , இத்தொகுதியில் 40 சதவீத வாக்குகள் பெற்றிருந்த அதிமுக இம்முறை, தென் சென்னையில் வெறும் 15 சதவீத வாக்குகளே பெற்றிருப்பது அதிமுக மக்கள் செல்வாக்கை இழந்து வருகிறது என்பதையே காட்டுகிறது. (gfx out)

சென்னையின் மற்றொரு நாடாளுமன்றத் தொகுதியான வட சென்னையில், இரண்டாம் இடத்துக்கு அதிமுக வந்துள்ளது என்று சொன்னாலும், அங்கேயும் அதிமுகவின் வாக்கு சதவீதம் வெகுவாக குறைந்திருக்கிறது. அதிமுக வேட்பாளர் அதிமுக வேட்பாளர் ஆர்.மனோகர் ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 111 வாக்குகள் பெற்ற நிலையில், அதற்கு அடுத்த படியாக வந்த பாஜக வேட்பாளர் ஆர்.சி.பால் கனகராஜ் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 318 வாக்குகள் பெற்றிருப்பது குறிப்படத்தக்கது.

இதே வடசென்னை தொகுதியில் 2014ம் ஆண்டில் 40 சதவீத வாக்குகளை பெற்றிருந்த அதிமுக இம்முறை வெறும் 17.5 சதவீத வாக்குகளையே பெற்றுள்ளது.

சென்னையில் இருக்கும் மற்றொரு தொகுதியான மத்திய சென்னையில் பாஜக வேட்பாளர் வினோஜ் பி. செல்வம் ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 159 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றிருக்கிறார். இந்த தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி 72 ஆயிரத்து 16 வாக்குகள் பெற்றிருக்கிறார்.

2014ம் ஆண்டு தேர்தலில் 40 சதவீத வாக்குகளுடன் இருந்த அதிமுக இப்போது மத்திய சென்னையில் வெறும் 10 சதவீத வாக்குகளே பெற்றுள்ளது. (gfx out)

சென்னையைப் பொறுத்தவரை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை, 40 சதவீத வாக்குகளைத் தக்க வைத்திருந்தார்.

அவரது மறைவுக்குப் பின், அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி வந்த பின், அதிமுகவின் வாக்கு வங்கி அதிகமாக அதேசமயம் வெகுவேகமாக குறைந்துள்ளது. அதிமுக கட்சி எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

இரட்டை இலை சின்னம் அதிமுகவுக்கு இருக்கிறது. என்றாலும் அதிமுகவுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை என்பதையே என்பதையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிமுகவுக்கு மட்டுமில்லை, தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்ற திமுகவின் வாக்கு சதவீதமும் குறைந்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமுன்ற தேர்தலில், 23 தொகுதிகளில் போட்டியிட்டு 33.12 சதவீத வாக்குகள் பெற்ற திமுக, இந்த தேர்தலில் 22 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் 26.93 சதவீத வாக்குகள் மட்டுமே பெற முடித்திருக்கிறது.

உயர்மட்ட நகர்ப்புற மக்களிடம் பாஜகவின் செல்வாக்கு கூடியிருக்கும் நிலையில், தொழிலாளர்கள், சிறுபான்மையினர், இளைஞர்கள் மத்தியிலும் பாஜக வளர்ந்துள்ளதை பதிவான வாக்குகள் காட்டுவதாக கூறும் அரசியல் நோக்கர்கள், இதுதான், இரண்டு திராவிட கட்சிகளின் வாக்கு சதவீதம் குறைந்ததற்கு முக்கிய காரணம் என்று தெரிவிக்கின்றனர்.

Tags: Why did ADMK vote percentage fall in Chennai?
ShareTweetSendShare
Previous Post

மேற்கு வங்கத்தின் தேர்தல் முடிவுகள்! – பாஜக Vs மம்தா

Next Post

தொடர் தோல்வி கேள்விக்குறியாகும் அதிமுக எதிர்காலம்?

Related News

போதை தலைக்கேறியதும் தலிபான் தாக்குதல் ஞாபகங்கள் துரத்தின – மலாலா

வரலாற்றுச் சிறப்புமிக்க காசா அமைதி ஒப்பந்தத்தை இந்தியா வரவேற்கிறது : ரந்தீர் ஜெய்ஸ்வால்

தெலங்கான மாநிலத்தின் கொட்டித் தீர்த்த கனமழை : நெல் மணிகள் சேதம் – விவசாயிகள் வேதனை!

வெனிசுலா : சுரங்க விபத்தில் 14 தொழிலாளர்கள் உயிரிழந்த பரிதாபம்!

டிரம்புக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் பாராட்டு!

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி வகுத்த இலங்கை கொள்கை தோல்வியில் முடிந்ததற்கு ராணுவமும், உளவுத்துறையும் தான் காரணம்  – மணிசங்கர் ஐயர் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

உத்தரப் பிரதேசத்தில் ரயில் மோதி இளைஞர் சம்பவ இடத்திலேயே பலி!

தலைகுனிந்து நிற்கிறது தமிழக அரசு – நயினார் நாகேந்திரன்

சீனா : விபத்தில் தீப்பிடித்து எரிந்த ஷியோமி நிறுவன மின்சார கார்!

6-வது நாளாக தொடரும் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம்!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்த காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!

ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை!

கரூர் வழக்கைச் சிபிஐ விசாரிப்பதில் சீமானுக்கு ஏன் பதற்றம் : அண்ணாமலை கேள்வி!

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை!

சீனாவுக்குப் போட்டியாக பிரம்மபுத்ரா நதியில் 7 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் புதிய நீர்மின் திட்டம் : இந்தியா முடிவு!

அசாம் : தேயிலை தோட்ட தொழிலாளர்களின் போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies