திருப்பத்தூர் மாவட்டத்தில் தோல் தொழிற்சாலைகளில் இருந்து திறந்து விடப்பட்ட கழிவுநீரால் பாலாறு மாசடைந்துள்ளது.
ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால், மாராபட்டு பகுதியில், பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பாலாற்றின் அருகே உள்ள தோல் தொழிற்சாலைகள், கழிவு நீரை நேரடியாக ஆற்றில் திறந்து விடுவதால், பாலாறு நுரை ததும்பி மாசடைந்துள்ளது.
இதனால், நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்த விவசாயிகள், இந்தப் பிரச்சினைக்கு மாவட்ட நிர்வாகம் தீர்வு காண வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.