பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை பதவியேற்க குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி,நாளை டெல்லியில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களைக் கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி நாடாளுமன்ற குழு தலைவராக பிரதமர் மோடி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பாஜக மீண்டும் ஆட்சியமைக்க நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளமும், சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசமும் ஆதரவளித்தன.
இதைத்தொடர்ந்து, என்டிஏ கூட்டணி கட்சி எம்.பி.க்களின் ஆதரவு கடிதத்துடன் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை பிரதமர் மோடி சந்தித்தார்.
ஆதரவு கடிதத்தை பெற்ற குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி மீண்டும் ஆட்சியமைக்க அதிகாரபூர்வமாக அழைப்பு விடுத்தார்.
அதன்படி, வரும் நாளை இரவு 7.15 மணியளவில் மோடி பிரதமராக பதவியேற்கிறார். அவருடன் மத்திய அமைச்சர்களும் பதவியேற்கின்றனர்.