தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
அண்ணா பேருந்து நிலையம் பின்புறம் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையத்தில் மர்மநபர் நுழைந்துள்ளார்.
பின்னர், ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயற்சித்துள்ளார். அப்போது திடீரென அலாரம் ஒலித்ததால் அதிர்ச்சி அடைந்த நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார், சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.